கல்லூரி மாணவ, மாணவியரிடையே நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (29.09.2025) உலக சுற்றுலா தினம்- 2025 முன்னிட்டு இவ்வாண்டிற்கான கருப்பொருளான "சுற்றுலாவும் நிலையான மாற்றமும்" (Tourism And Sustaintable Transformation ) என்ற கருத்துருவின் அடிப்படையில் கல்லூரி மாணவ, மாணவியரிடையே நடைபெற்ற கட்டுரை, குறும்படம்(Short flim), வினாடிவினா உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S,. அவர்கள் வழங்கினார்.
சுற்றுலாத்துறையின் சார்பாக, விருதுநகர் சாத்தூர் ஸ்ரீ எஸ்.இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரி, சாத்தூர் மற்றும் வி.வி.வி. கல்லூரி மற்றும் விருதுநகர் இந்து நாடார் செந்தில்குமாரா நாடார் கல்லூரி, கலசலிங்கம் பல்கலைக்கழகம், கிருஷ்ணன் கோவில் மற்றும் எஸ்.எப்.ஆர்.கல்லூரி சிவகாசி வரலாற்றுத்துறை மற்றும் தமிழ்த்துறை இணைந்து கல்லூரி மாணவ/மாணவர்களுக்கு “சுற்றுலாவும் நிலையான மாற்றமும்” என்ற கருப்பொருளின் அடிப்படையில் 26.09.2025 அன்று சாத்தூர் ஸ்ரீ எஸ்.இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரி மற்றும் சாத்தூர் கல்லூரியில் கட்டுரைப்போட்டி, குறும்படப் போட்டி மற்றும் வினாடி-வினாப் போட்டிகள் நடத்தப்பட்டது.
மேலும், இந்நிகழ்வின் தொடர்ச்சியாக 27.09.2025 அன்று முக்கிய சுற்றுலாத்தளமானஸ்ரீ நாச்சியார் ஆண்டாள் திருக்கோவில், ஸ்ரீ வில்லிபுத்தூரில் சுற்றுலாத்துறையின் சார்பில், சுற்றுலாப் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.அதனைத்தொடர்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ/மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில்,சுற்றுலா அலுவலர் திரு. ப.முனியப்பன்(மு.கூ.பொ), அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ / மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply